×

சிவகங்கை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: கடைகளுக்கு அபராதம்

 

சிவகங்கை, அக்.31: சிவகங்கை 48 காலனி பகுதி வாரச்சந்தையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பார்மலின் தடவிய 25 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை நகர் 48 காலனியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கே காய்கறிகள், மீன்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சரவணன் தலைமையில் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்தையில் அதிரடி ஆய்வு செய்தனர்.

சந்தையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கடைகளில் ஆய்வு செய்ததில் இரண்டு கடைகளில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இரு கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்து, அவர்களிடம் இருந்த 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். மேலும் இரண்டு கடைகளுக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தனார்.

அப்போது மீன்களை வாங்கும் போது பார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்பட்டுள்ளாத என கண்டறிந்து மீன்கள் வாங்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். மேலும் இதுபோல ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்தால் கடைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர். மேலும் சந்தையில் பிற கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

The post சிவகங்கை வாரச்சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு: கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Food Safety Department ,Dinakaran ,
× RELATED தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ,...